ஓ சொல்றியா பாடலின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா செய்த விஷயம்.. இணையத்தை பற்ற வைத்த புகைப்படம்
தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகசைதன்யாவை கடந்த மாதம் விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் இது தான் இருக்கும் என்று கூறி, பல விதமாக சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன.
ஆனால் அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்தார் சமந்தா. விவாகரத்துக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வரும் வழியாக, படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவருடைய கைவசம், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி, கதாநாயகியை முன்னிலை படுத்தி எடுக்கப்படும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார். விரைவில் இப்படங்கள் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த வசூலில் வேட்டையாடிக்கொண்டிருக்கும் படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இந்நிலையில் அப்பாடலின் படப்பிடிப்பின் போது சமந்தா எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
