8 மாசமா படுத்த படுக்கை!! பாப்பா-ன்னு கூறி சமந்தாவுக்கு ஆறுதலாக இருக்கும் ஜிம் மாஸ்டர்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட் இயக்குனர்கள் படங்களில் கமிட்டாகி வருபவர் நடிகை சமந்தா.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு 5 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராகினார் சமந்தா.

இடையில் விவாகரத்து பிரச்சனையை தாண்டி சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். இதுகுறித்து அவரே, படுத்த படுக்கையில் இருந்து எழுந்து நிற்கக்கூட கஷ்டப்பட்டதாகவும் அதிலிருந்து மீண்டு வருவேன் என்றும் தன்னம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
அதற்காக கடினமான உடற்பயிற்சி சிகிச்சை மேற்கொண்டு வந்த சமந்தா 8 மாதங்களுக்கு பின் குணமடைந்து தன்னுடைய பழைய ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ரூசோ சகோதர்கள் இயக்கும் வெப் தொடரில் நடிக்க கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் Citadel வெப் தொடரின் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் மற்றும் ஜிம் மாஸ்டருடன் எடுத்த ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அரியவகை நோயால் கஷ்டப்பட்ட போது தனக்கு ஆறுதலாக உடல் விசயத்தில் பெரிய பங்காற்றிய ஜிம் மாஸ்டர் கூறிய பதிவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், நன்றாக மூச்சுவிட்டுக்கொள் பாப்பா என்று ஆரம்பித்த ஒரு பதினை பகிர்ந்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஒருவேலை அப்படி இருக்குமோ என்று கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.

