மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்கு பின் இப்படியொரு லுக்!! பழைய நிலைக்கு திரும்பிய சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் கிளாமரில் தூக்கலாக நடித்த சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் பல மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நடிக்க முடியாத அளவிற்கு கஷ்டங்களை சந்தித்து வந்தேன் என்று பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்கு இடையில் யசோதா, சாகுந்தலம், குஷி, பாலிவுட் வெப் தொடர் என்று பிஸியாக நடித்தும் வந்தார்.

சமீபத்தில் அதற்காக சிகிச்சையை வெளிநாட்டில் முடித்துகொண்டு மும்பை திரும்பி ஆள் அடையாளம் தெரியாமல் மாறினார்.
தற்போது ஒர்க்கவுட் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய அடுத்த ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளார் நடிகை சமந்தா.
தனக்குத்தானே ஆறுதல் கூறும்படியான பதிவினை போட்டிருந்த சமந்தா தற்போது, வெளிச்சத்தை தேடுகிறேன் என்று கூறி க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பிரபலங்கள் பாராட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.