அரியவகை நோயால் படுத்த படுக்கையில் இப்படியொரு செயல்!! நடிகை சமந்தா போட்ட புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2021 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளில் சிக்கியப்பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு பின் கடினமாக நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தி யசோதா படம் வெளியாகும் முன் 3 மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயாய் பாதிப்பு அடைந்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்காக கடினமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் எழுந்து கூட நடிக்க முடியாமல் படுத்த படிக்கையில் இருக்கும் சமந்தா வெளிநாட்டில் சிகிச்சைக்காக செல்லவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
தற்போது சகுந்தலம் படத்தில் நடித்துள்ள சமந்தா அப்படத்தின் டப்பிங் வேலையில் உட்கார்ந்தபடி பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.