உன் காசு ஒன்னும் வேண்டாம்! நாக சைதன்யா கொடுத்த ஜீவனாம்சத்தை சமந்தா தூக்கி எறிய இதுதான் காரணமா?

Samantha Naga Chaitanya
By Edward Apr 30, 2022 01:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சமந்தா. பல்லாவரம் இளம் பெண்ணாக அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க ஆரம்பித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது திகழ்ந்து வருகிறார். மேலும் இடையில் நடிகர் சித்தார்த்துடன் காதல், பின் பிரேக்கப் என்று இருந்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார்.

2017ல் இருவர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடித்து வந்த சமந்தா இடையில், சூப்பர் டீலக்ஸ், தி பேமிலி மென் 2 உள்ளிட்ட படங்களில் சர்ச்சையான காட்சிகளில் நடித்து நாக சைதன்யா குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்தார்.

இதனால் நாக் சைதன்யாவும் சமந்தாவும் 4 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக விவாரத்து செய்தியை அறிவித்தனர். விவாகரத்துக்கு பின் இருவரும் இரு துருவங்களில் சென்றுவிட்டனர்.

இதனை முழுவதுமாக பயன்படுத்தி சுதந்திர பறவையாக ஊர் சுற்றியும் படங்களில் க்ளாமரில் தாராளம் காட்டியும் நடித்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடு 5 நிமிடத்தில் 5 கோடியை சம்பாதித்துச்சென்றார்.

இந்நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தபோது அவர்கள் சார்பில் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்துள்ளனர். 200 கோடி ரூபாயை துளிக்கூட மதிக்காத சமந்தா வேண்டவே வேண்டாம் என்று கூறியதோடு திருமண புடவையையும் திரும்ப கொடுத்துள்ளார்.

இதற்கு காரணம் சமந்தாவின் சொத்து மதிப்பு நாக சைதன்யாவை விட அதிகம் என்பதுதானாம். நாக சைதன்யாவின் மொத்த சொத்து 34 கோடி மட்டுமே.

ஆனால் சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடியாகவும் அதன் உடன் ஹைதராபாத், சென்னை, மும்பை என வீடுகளும், கார் என சொத்துக்களை வைத்திருக்கிறார்.

இப்படியிருக்கும் போது அவரிடம் இருந்து அந்த பணத்தை வாங்க வேண்டாம் என்று சமந்தா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. என்னதான் இருந்தாலும் உழைத்து முன்னேறியவர் தான் சமந்தா. அந்த உழைப்பின் மதிப்பு தெரியாதா என்ன..