நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வாடகைத்தாய் விசயம்.. சமந்தாவின் ரியாக்ஷன் இதுதான்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலின் வெற்றியை தொடர்ந்து சமந்தாவின் மார்க்கெட் 5 கோடியாக மாறியது.
அரியவகை நோய்
தற்போது விவாகரத்துக்கு பின் பல படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார். யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். விடாது படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு அரியவகை நோய் இருப்பதாக புகைப்படத்துடன் ஒரு பதிவினை போட்டிருந்தார்.
இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில், யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்திருக்கிறார் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் கொடுத்த நேரலையில் தமிழில் விஜே ரம்யா தொகுத்து வழங்கினார். அப்போது பல கேள்விகள் சம்ந்தாவிடம் கேட்கப்பட்டது.

இரட்டை குழந்தை
அதில் விஜே ரம்யா, சமீபகாலமாக Surrogacy மூலம் முன்னணி தம்பதியினர் இரட்டை குழந்தையை பெற்றுக்கொண்டனர். அந்த விசயத்தை பற்றி தான் பேச்சு. அது பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்டுள்ளார்.
அதற்கு சமந்தா, கருத்து கூறும் மனநிலையில் இருக்கும் குணம் எனக்கு இல்லை. அவரவர்கள் வாழ்க்கையில் என்ன முடிவெடுக்கிறார்களோ, அவர்களின் சந்தோஷம் தானே. இதுகுறித்து கருத்து கூற தேவையில்லாத ஒன்று என கூறியிருக்கிறார்.