கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்ல காரணம் சமந்தா தானா.. ஆனால், முதல் படம் படுதோல்வி
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அட்லீ தயாரிப்பில் உருவான இப்படத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான வசூல் தான் இப்படத்திற்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர்.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகிற்கு செல்ல காரணமாக இருந்தவர் சமந்தா என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, பேபி ஜான் படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னது சமந்தா தான். என்னால் அந்த கதாபாத்திரத்தை திறம்பட நடிக்க முடியும் என அவர் நம்பியதற்கு என் நன்றிகள் என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.