விவாகரத்துக்கு பிறகு ஆடை விஷயத்தில் எல்லைமீறும் சமந்தா! விமர்சித்தவருக்கு பதிலடி...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சமந்தா அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானார்.
விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சமந்தா எல்லைமீறிய காட்சிகளில் நடித்து குடும்பத்தினரின் எதிர்ப்பை சம்பாத்தித்தார்.
இதனால் கருத்து வேறுபாடுகள் கணவருடன் தோன்ற கடந்த ஆண்டு விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்தார். அதன்பின் க்ளாமர் ஆடை, விளம்பரம், மது பார்ட்டி, குத்தாட்டம் என எல்லைமீறிய செயல்களை செய்து வந்தார்.
சமீபத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஆடையில் தாராளம் காட்டி ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார். பொது நிகழ்ச்சியில் இப்படியான ஆடை தேவையா என்று பலர் விமர்சித்து பேசிவந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க சமந்தா, நாம் 20222ல் இருக்கிறோம்.
பெண்களின் ஆடைகளை வைத்து இப்படி நிலைப்படுத்துவதை நிறுத்துங்கள். அதை விட்டுவிட்டு நம்மை நிலையை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.