விவாகரத்துக்கு பின் வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ்!! நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சமந்தா, கடந்த ஆண்டு கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின் பல பிரச்சனைகள் சவால்களை சந்தித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிகப்பட்டு கஷ்டப்பட்டும் வருகிறார்.

இதற்காக தீவிர சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதனைதொடர்ந்து அவர் நடிப்பில் சகுந்தலம் என்ற படம் வரும் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. தன்னைவிட 5 வயது நடிகரான தேவ் மோகன் என்பவருடன் ரொமான்ஸ் செய்துள்ளார்.
3டி படமாகவும் வெளியாகவுள்ள இப்படத்தில் போஸ்டரை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில் ரொமான்ஸ் செய்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.