மூன்று வயது குறைந்த நடிகருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சமந்தா.. குஷியாக வெளியிட்ட புகைப்படம்
சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். மேலும் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஆம், ராஜ் - டிகே இயக்கத்தில் அடுத்ததாக சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க சிவா இயக்குகிறார். இப்படத்தின் போஸ்டர் மட்டும் அவ்வப்போது வெளிவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியுடன் நடிகை சமந்தா போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சமந்தா, படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்க விஜய் தேவரகொண்டா சமந்தாவை விட மூன்று வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.