யாருக்கும் வராத மிகப்பெரிய தைரியம்!! மூடி மறைக்க வேண்டிய விசயத்தை அம்பலப்படுத்திய சமந்தா..
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இன்றோடு சமந்தாவுக்கு 36 வயதை எட்டிய நிலையில் அவரை பற்றிய சில தைரியமான விசயங்களை பலர் பாராட்டி வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் புஷ்பா படத்தின் கிளாமர் ஐட்டம் ஆட்டத்திற்கு பின் இந்தியளவில் மிகவும் பேசப்பட்டு வருகிறார் சமந்தா.
ஆனால் கடந்த ஆண்டு தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதை வெளிப்படையாக கூறினார். அதனால் பல மாதங்களாக எழுந்து நடக்ககூட முடியாத கஷ்டங்களை சந்தித்ததாகவும் பேட்டிகளில் போட்டுடைத்தார்.
இதை கூறிய சமந்தாவை யாரும் கிண்டல் செய்யாமல் மீண்டு வரவும் குணமடைய நம்பிக்கை கொடுத்து ஆறுதலும் கூறி வந்தனர். அதேபோல் அரிய வகை நோய் இருப்பதால் யாரும் வாய்ப்பு கொடுக்கமாட்டார்களே என்று நினைத்தும் இதனால் தன் கேரியர் போய்விடுமே என்று யோசித்தும் அதை வெளிப்படையாக கூறியிருக்கிறார் சமந்தா.
பல படங்களை ஒதுக்கி வந்த சமந்தா, உடல் நலம் காரணமாகத்தான் அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்துள்ளார். மேலும் தற்போது சிடாடல் வெப் தொடரில் கடினமாக நடித்து காயத்தையும் சந்தித்து வருகிறார். உடலை வைத்து சமந்தா விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று ஒரு தயாரிப்பாளர் விமர்சித்ததை கூட மறைமுகமாக கூறி பதிலடியும் கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தற்போது கடின உடற்பயிற்சி நோயில் இருந்து முழுமையாக குணமடைய அதற்கான சிகிச்சை மேற்கொண்டதை பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவினை பகிர்ந்திருக்கிறார். தனக்கு இருக்கும் பிரச்சனையை மூடி மறைக்கும் நடிகைகள் மத்தியில் சமந்தா இப்படி செய்தது மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து பலருக்கும் உதாரணமாக இருந்து வருகிறார் என்று புகழப்பட்டும் வருகிறார்கள்.
