5 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ்..விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவின் அடுத்த அவதாரம்..
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் புது அவதாரம் எடுத்த சமந்தா, கிளாமர் குத்தாட்டம், போட்டோஷூட், எல்லைமீறி நடிகருடன் நெருக்கம் என்று நடித்து ஆளே மாறிப்போனார்.
புஷ்பா படத்தின் குத்தாட்டத்திற்கு பிறகு 5 கோடி சம்பளமாக மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார்.
தற்போது யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து முடித்து ஓய்விற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடன் 5 வயது சிறிய நடிகருடன் ரொமான்ஸ் செய்த யசோதா படத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
தேவ் மோகன் என்ற நடிகருடன் கிளாமர் ஆடையில் ரசிகர்களை மயக்கும் படியான போஸில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சமந்தா. இப்படம் நவம்பர் மாதம் 4 திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும் அறிவித்துள்ளார்.

