கணவருக்கு மட்டும் தெரிந்த சமந்தாவின் மறுமுகம்! ஷாக் கொடுக்கும்படி நடந்து கொண்ட நாகசைதன்யா?

Samantha Naga Chaitanya
By Edward May 08, 2022 08:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட 4 ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதற்கான காரணம் சமந்தாவா? இல்லை நாக சைதன்யாவா? என்ற கேள்விகள் எழுந்தது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு சமந்தாவின் நடவடிக்கைகளை பற்றி நாக சைதன்யா எதை பற்றியும் எங்கும் கூறாமல் மனைவி புராணம் தான் பாடி வந்தார். அப்படியிருக்கையில் சமந்தாவும் நாகசைதன்யாவும் விவாகரத்து பெற என்ன காரணம் என்று நோண்டி நோண்டி பலர் ஆராயத்துவங்கினார்கள்.

சொல்ல போனால் சமந்தாவும் விவாகரத்துக்கு பிறகு ஜீவனாம்சம் கொடுக்க வந்தும் அதை அவர்களிடம் இருந்து வாங்காமல் இருந்தார். இப்படியிருக்கையில் சமந்தா சமீபத்தில் நாக சைதன்யா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளாராம்.

என் வாழ்க்கையில் பலர் ஒரு வெற்றிகரமான நடிகை சமந்தா என்று தான் பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும் தான் எதுவும் இல்லாத சமந்தா என பார்த்தார். அதனால் எனக்கு அவர் எப்போதுமே ஸ்பெஷல் தான் அவர் என்னுடைய பிரண்டாக இருந்திருக்கிறார்,

அது எப்போதும் முடிவுக்கு வராது என தெரிவித்துள்ளார். இப்படி சமந்தா கூறியது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அப்படி பாசமாக இருந்த சமந்தா நாக சைதன்யாவை ஏன் விவாகரத்து செய்ய துணிந்தார் என்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகிறது.

சமந்தாவின் சமீபத்தில் போட்டோஷூட்கள் எல்லைமீறியபடி இருப்பதால் இதற்காகவும் சமந்தா விவாகரத்து பெற்றிருக்கலாம் அதாவது சுதந்திரமாக இருக்க என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.