திருமணத்திற்கான பூஜையில் சமந்தா மற்றும் சித்தார்த், புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை

Siddharth Samantha
By Jeeva Aug 15, 2022 02:00 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா. புஷ்பா, வெப் சீரிஸ் என தற்போது பாலிவுட் வரை தனது மார்க்கெட்டை பெரிதாகி இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களும் 4 வருட திருமண வாழ்க்கை பின் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

மேலும் சமந்தா நாக சைதன்யாவிற்கு முன் நடிகர் சித்தார்தை தான் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பொது இடங்களில் இவர்கள் குறித்த புகைப்படங்கள் அப்போது செம வைரலானது.

அதன்படி அப்போது பெரிய கிசுகிசுக்கப்பட்ட விஷயம் அவர்கள் இருவரின் திருமணம். ஆம், இருவரும் கலந்து கொண்ட பூஜை ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி அது திருமணத்திற்கான பூஜை என்றும் அப்போது பேசப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எதோ திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது.   

திருமணத்திற்கான பூஜையில் சமந்தா மற்றும் சித்தார்த், புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை | Samantha Sidharath Marriage Rumours

திருமணத்திற்கான பூஜையில் சமந்தா மற்றும் சித்தார்த், புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை | Samantha Sidharath Marriage Rumours