கணவரின் பெயரை எடுத்தது விவாகரத்தா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..

samantha divorce nagachaitanya tamilactress
By Edward Aug 28, 2021 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறுகதாபாத்திரத்தில் ஆரம்பித்து சமீபத்தில் தி பேமிலி மேன் படம் வரை நல்ல நடிப்பை கொடுத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சமந்தாவின் தி பேமிலி மேன் 2 படம் நல்ல வரவேற்பை பெற்று சில பிரச்சனைகளையும் உருவாக்கியது.

இதையடுத்து சமுகவலைத்தளத்தில் இருந்து சமந்தா அக்கினேனி என்ற பெயரை எடுத்துவிட்டு வெறும் S என்று மாற்றிவிட்டார். இதனால் கணவருடன் விவாகரத்தா? என்ன பிரச்சனை என்று செய்திகள் கசிந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சமீபத்தில் விஜே அனுபாமா சோப்ராவிற்கு நேரலையில் கலந்து உரையாடினார். அதில், சமுகவலைத்தளத்தில் ஏன் பெயரை எடுத்தீர்கள் என்று கேட்டார் அனுபமா சோப்ரா.

அதற்கு பதிலளித்த சமந்தா, இதுபோன்ற வதந்திக்கும் என்னால் எந்த ரியாக்‌ஷனும் செய்யமுடியாது துடைத்துவிட்டு சென்றுவிடுவேன். பலர் என்னிடம் கேட்பார்கள் கணவருடன் என்ன பிரச்சனை என்று. அப்படியெல்லாம் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.