குத்தாட்டம் ஆட வேண்டாம்.. இத மட்டும் பண்ணுங்க.. விவாகரத்தான சமந்தாவிடம் புஷ்பா படக்குழு பேச்சு வார்த்தை

samantha acting pushpa 2 o solriya maama
By Kathick Apr 07, 2022 09:00 PM GMT
Report

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் புஷ்பா. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தென்னிந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, பிரபல முன்னணி கதாநாயகி சமந்தா, நடனம் ஆடி இருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் புஷ்பா 2 படத்தில் சமந்தா நடனம் ஆடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா நடனம் ஆகமாட்டார் என்று தகவல் வெளிவந்தது. அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டாணி குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில், நடனம் ஆடவில்லை என்றாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.