மயோசிடிஸ் அரியவகை நோயின் தீவிர தாக்கம்!! சினிமாவை விட்டு வெளியேற முடிவெடுத்த நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகையாக மாறியவர் நடிகை சமந்தா.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா படம் மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்றது. இதற்கிடையில் விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டும் வந்துள்ளார் சமந்தா. தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தென் கொரியா நாட்டிற்கு சென்று சிகிச்சையும் பெறவிருக்கிறாராம்.

இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்ததால் படங்களில் தற்போது நடிக்கப்போவதில்லை என்ற முடிவை சமந்தா எடுத்துள்ளாராம். வரும் ஜனவரி மாதம் தான் கமிட்டாகி டேட் கொடுக்கப்பட்ட குஷி படத்தினை முடித்து விட்டு நீண்ட ஓய்வினை எடுக்கவுள்ளாராம் சமந்தா. அந்த நோயில் இருந்து எப்போது சரியாக மீண்டு வருகிறாரோ அப்போது தான் கமிட்டான படங்களுக்கு டேட் கொடுப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.