கணவரை விவாகரத்து செய்யுங்கள்! எல்லைமீறிய கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..

#samantha #wedding #divorce
By Jon Dec 25, 2020 07:48 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை சமந்தா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படங்களின் நடித்து காதலித்து வந்த நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க குடும்பத்தினருடன் ஒப்புதலோடு நடித்து வருகிறார்.

லாக்டவுன் முடிந்த பிறகு தீபாவளி விடுமுறை என கிடைக்கும் நேரத்தில் கடற்கரை கடற்கரையாக ஊர்சுற்றி வந்தனர். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவிற்கு ரசிகர்கள் பலர் மெசேஜ் செய்து பேசி வருவார்கள்.

அந்தவகையில், ஒரு இளைஞர் சமந்தாவிடம் கேட்கக்கூடாத கேள்வி கேட்டுள்ளார். தயவுசெய்து நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைக் கேட்ட சமந்தா, என்னால் அது முடியாது, வேண்டுமென்றால் நாக சைதன்யாவிடம் கூறுங்கள் என தெரிவித்து விட்டாராம். சமந்தாவுக்கு தமிழில் சமீபகாலமாக பெரிய அளவு பட வாய்ப்பே இல்லை என்பது தெரிந்தது தான்.

தற்போது அவரது கைவசம் இருக்கும் ஒரே தமிழ்படம் என்றால் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம்தான்.

இதிலும் இரண்டாவது கதாநாயகியாக இருக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இதன் காரணமாக விக்னேஷ் சிவன் மற்றும் சமந்தா இருவருக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Gallery