அடுத்தவன் உழைப்பில் கிடைக்கும் காசு எனக்கு வேண்டாம்.. பெரிய நடிகர்களை மிஞ்சிய நடிகை சமந்தா..

Samantha Indian Actress
By Edward Nov 05, 2022 04:31 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து நல்ல வரவேற்பு பெற்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருப்பவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை சமந்தா மியோசிட்டிஸ் என்ற ஆட்டோ இன்யூன் என்ற அரியவகை நோயால் பாதிகப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அதிலிருந்து சீக்கிரம் மீண்டு வருவேன் என்று தையரியமாக கூறியிருந்தார். சமந்தா பல கஷ்டங்களை துணிச்சலாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ளும் குணம் கொண்டவர். திருமணம், விவாகரத்து, உடல் பிரச்சனை, படங்கள் என்று அனைத்தையும் சமாளித்து கடினமான பெண்ணாக திகழ்ந்து வருகிறார்.

அந்தவகையில் யசோதா படத்தில் பல காட்சிகளில் ஸ்டண்ட் செய்துள்ளார் சமந்தா. அப்படத்தின் சண்டை பயிற்சியாளராக யானிக பென் பணியாற்றியிருக்கிறார்.

அடுத்தவன் உழைப்பில் கிடைக்கும் காசு எனக்கு வேண்டாம்.. பெரிய நடிகர்களை மிஞ்சிய நடிகை சமந்தா.. | Samantha Who Has Ripped Big Actors

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சமந்தா மிகத்துணிச்சல் நிறைந்த பெண்ணாக இருந்து நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்ற சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.

டூப் வைத்துக்கொள்ளலாம் என்று நாங்கள் சொன்னதற்கு, அடுத்தவர்கள் உழைப்பில் வரும் காசு, புகழ் எனக்கு தேவையில்லை என்று கூறி சண்டைக்காட்சிகளில் கஷ்டப்பட்டு நிறைவாக நடித்துக்கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

பெரிய நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பலர் கூட டூப் வைத்துக்கொள்கிறார்கள். கால்ஷீட், வயது முதிர்ச்சி போன்ற காரணங்களால் நடிகர்கள் டூப் வைத்திருக்கும் போது சமந்தா ரியாலிட்டியாக நடந்து கொண்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.