விவாகரத்துக்கு பின் அரியவகை நோயால் பாதிகப்பட்ட சமந்தா!! கையில் மாலையோடு சுற்றும் நிலை..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து 4 ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

அதன்பின் கிளாமர் பக்கம் சென்றும் சுதந்திர பறவையாக படங்களில் நடித்து அவுட்டிங் சென்றும் வந்தார். கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரிய தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன் என்று கூறியிருந்தார் சமந்தா.
படுத்த படிக்கையில் நடிக்கமுடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்தும் வந்தார். இந்நிலையில் எப்போதும் தன் கையில் ஜெபமாலையை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறாராம் சமந்தா.

சமீபத்தில் நடைபெற்ற சகுந்தலம் டிரைலர் வெளியிட்டு விழாவில் கூட அந்த ஜெபமாலையுடன் தான் வந்திருக்கிறார்.
விமான நிலையத்தில் சமீபத்தில் செல்லும் போது கூட கையில் வைத்துக்கொண்டு தான் செல்கிறாராம். அந்த ஜெபமாலையை ஈசா யோகா மையம் சத்குரு அவர்கள் தான் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.


