விஜய் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!! முதலமைச்சர் குறித்து சமுத்திரகனி ஆதங்கமான பேச்சு...
CM விஜய்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றதில் இருந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தற்போதைய அரசியல் நிலைப்பாட்டு குறித்து பலரும் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வரும் நிலையில் இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பலருக்குமே அதிர்ச்சி, நேற்றுக்கூட நாங்கள் மதுரையில் பேசி கொண்டிருந்தபோது ரூ. 150 கோடிகள் செலவு செய்தது குறித்து பேசினோம். ரூ. 150 கோடிகள் எதற்காக செலவு செய்தார்கள், ரூ. 1500 கோடிகள் எடுப்பதற்கு தானே?.
3 பேர் மிஸ்ஸிங்
ஒரு கட்சி எல்லாம் காணவில்லை, சல்லடை ஆகிவிட்டது. அதன்பின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். முதல் வரிசையில் மூன்று பேர் மிஸ்ஸிங்.

அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீட்டிற்கே சென்று, அவர்களுடன் கைக்குலுக்கி, அவர்கள் தோள் மீது கை போட்டு, அன்பு செலுத்திய பண்பாளர் நீங்கள். அந்த 3 பேரை விட்டுவிட மாட்டீகள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.
தலைவா விட்டுடாதீங்க. ஏனெனில் பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் குடும்பம் தான் மிகவும் முக்கியமானது என்றும் மனைவி மீதும் பெற்ற பிள்ளைகள் மீது ஒரு பிடிப்பும் அவர்கள்தான் முக்கியம் என்ற எண்ணனும் வரவேண்டும். அதை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.