வாரிசு படத்தில் டயலாக் இல்லாமல் அசிங்கப்பட்ட பிக்பாஸ் நடிகை!! ஒரு காட்சியில் இல்லாத குஷ்பூவுக்கு 40 லட்சம்..
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் தில் ராஜு இயக்கத்தில் வாரிசு படம் அஜித்தின் துணிவுடன் நேற்று 11 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனத்தினை பெற்று வருகிறது. எக்கச்சக்கமான நட்சத்திரங்களுக்கு இப்படத்தில் சிறு ரோல் என்றாலும் சில டயலாக்குக்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா இப்படத்தில் ஷ்யாமுக்கு மனைவியாக நடித்திருந்தார். ஆனால் சில காட்சிகளில் மட்டும் இருந்த சம்யுக்தாவுக்கு ஒரு டயலாக்குகள் கூட இல்லை.
விஜய் படம் என்ற ஒரு பெயருக்காக நடித்து கொடுத்துள்ளார் சம்யுக்தா. மேலும் இப்படத்தில் விஜய்யின் அம்மா ரோலில் நடிகை குஷ்பூ நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரின் ஒரு காட்சி கூட படத்தில் அமையவில்லை.
குஷ்பூவை விட சம்யுக்தாவே பரவாயில்லை என்று பல கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்காக குஷ்பூ 40 லட்சம் சம்பளமாம்.