ஜனநாயகன் டீம்-ஆல் பிக்பாஸ் சனம் ஷெட்டிக்கு நடந்த கொடுமை, அவரே வெளியிட்ட வீடியோ

Vijay Sanam Shetty JanaNayagan
By Tony May 02, 2025 11:30 AM GMT
Report

சனம் ஷெட்டி

தமிழ் சினிமாவில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சனம் ஷெட்டி. அதை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இவருக்கு என்று ஒரு சில ரசிகர்கள் வட்டத்தை அது உருவாக்கியது, இதை தொடர்ந்து சனம் ஷெட்டி எப்போதும் தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசி வருபவர்.

இந்நிலையில் சனம் தற்போது, ஜனநாயகன் டீம்-ஆல் தான் அடைந்த துயரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் அந்த டீம்-ல் வேலைப்பார்க்கும் ஒரு உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு படத்தில் வாய்ப்பு கேட்டேன், அவரோ கண்டிப்பாக எதாவது வாய்ப்பு வரும் போது சொல்கிறேன் என்றார்.

தற்போது லாஸ்ட் ஷெடியூல் வந்து விட்டது, தற்போது வரை எந்த வாய்ப்பும் கொடுக்க வில்லை, பெரிய நடிகைகள் என்றால் இப்படி அலைய விடுவீர்களா? என்று சனம் கடுமையாக பேசியுள்ளார், இதோ அந்த வீடியோ...