அந்த பொண்ணு ஸ்லீவ்லெஸ் போட மாட்டாங்க..சாய் பல்லவியை ஒதுக்கிய காரணம் இதான்!! பிரபல இயக்குநர்
சாய் பல்லவி
மலர் டீச்சராக தென்னிந்திய ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சாய் பல்லவி, தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது நாக சைதன்யா நடிப்பில் தண்டோல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கலந்து கொண்டு சாய் பல்லவி பற்றிய ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.
சந்தீப் ரெட்டி வங்கா
அர்ஜுன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க முயன்றேன். இதுகுறித்து அவரின் Co-ordinator ஒருவரிடம் பேசியபோது, தன்னுடைய கதையை கேட்டதும் அந்தப்பெண் ஸ்லீவ்லெஸ்ஸே போடாது என்று கூறிவிட்டார். அதனால்தான் சாய் பல்லவியை நாயகியாக்கும் தன் முடிவை மாற்றியதாகவும் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
#SandeepReddyVanga Wanted to Cast #SaiPallavi for #ArjunReddy
— 𝐁𝐡𝐞𝐞𝐬𝐡𝐦𝐚 𝐓𝐚𝐥𝐤𝐬 (@BheeshmaTalks) February 2, 2025
pic.twitter.com/SD5AcjpKaW