டாக்டர் பட வில்லனால் ஹீரோ அவதாரம்? அசிங்கபட்ட சந்தானம் எடுத்த முடிவு..

santhanam vinairai
By Edward Dec 24, 2021 07:34 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடியனாக இருந்து வடிவேலுவிற்கு அடுத்த இடத்தினை பெற்று வந்தவர் சந்தானம். ஹீரோக்களின் நண்பராக நடித்து தன் பாணியில் கலாய்த்து மக்கள் மனதை ஈர்த்து வந்தார். திடீரென கதாநாயனாகதான் நடிப்பேன் என்று ஸ்டிரிக்ட்டாக கூறி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஹீரோவாக நடித்து ஒருசில படங்கள் தவிர பெரிய தோல்வியையும் சந்தித்து வந்தார் சந்தானம். இதற்கு காரணம் அரண்மனை படம் தானாம். சுந்தர் சி இயக்கத்தில் 2014ல் வெளியான படம் அரண்மனை. ஹன்சிகா, சுந்தர் சி, வினய் ராய், ஆண்ட்ரியா, ராய்லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படத்தில் காமெடியனாக நடித்து வந்த சந்தானம் தனி கேரவன் கொடுக்க கேட்டுள்ளாராம். அதற்கு காரணம் தன்னுடன் பல படங்களில் நடித்த வினய்க்கு மட்டும் தனியாக கேரவன் கொடுக்கப்பட்டது. ஆனால் தனக்கு கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்துள்ளார் சந்தானம்.

இதனால் ஹீரோவாக இருந்தால் தான் இப்படியான மரியாதை கிடைக்கும் என்ற நோக்கில் அடுத்த படங்களிலேயே ஹீரோவாக நடித்தும் சில படங்களில் காமெடியனாகவும் நடித்து வந்துள்ளார்.

காமெடியனாக நடித்து லட்சத்தில் சம்பளம் வாங்கிய சந்தானம் தற்போது தனியாக தயாரிப்பிலும் ஈடுபட்டு படங்களில் ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.