நீதிமன்றம் முடிவுக்கு எடுக்கட்டும், நீங்கள் யார்... நீயா நானா கோபிநாத்திற்கு சீரியல் நடிகை சரமாரி கேள்வி
நீயா நானா
சமூகத்தில் நடக்கும் நிறைய பொதுநல விஷயங்கள் பற்றி விவாதிக்கும் மேடையாக பல வருடங்களாக இருந்து வருகிறது நீயா நானா நிகழ்ச்சி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் சமீபத்தில் நாய்கள் ஆதரிப்பவர்களுக்கும், ஆதரவு கொடுக்காதவர்களுக்கும் இடையிலான விவாதம் நடந்தது. இந்த ஷோவில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் தாங்கள் பேசிய நிறைய விஷயங்கள் கட் செய்யப்பட்டு ஒளிபரப்பானதாக குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை சந்தியா பேசுகையில், விஜய் டிவியும் கேடு கெட்ட மீடியா லிஸ்டில் இணைந்துவிட்டார்கள்.
ஒருபக்கம் தான் நியாயப் படுத்தனும்னா எதுக்கு இந்த நிகழ்ச்சி, அதுக்கும் மேல நீதிமன்றத்துல கேஸ் போய்கிட்டு இருக்கு, தீர்ப்புக்கு காத்துட்டு இருக்கோம்.
இவங்க என்னவோ நீதிபதி மாதிரி இந்த நிகழ்ச்சியை நடத்தி இன்னமும் நாய்கள் மேலையும், நாய் பாதுகாவலர்கள் மேலயும் இருக்கும் வெறுப்பை வளர்த்து விடுறது ஒரு பொறுப்புள்ள மீடியா பண்ற விஷயமா? கோபிநாத் நீங்க என்ன நீதிபதியா? என கோபமாக பேசியுள்ளார்.