39 வயசுல அந்த ரோலில் நடிக்கிறது தப்பில்ல!! சீரியல் நடிகை மீரா சேச்சி ஓபன் டாக்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
மீரா கிருஷ்ணன்
2003ல் மலையாள சினிமாவில் வெளியான மார்கம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை மீரா கிருஷ்ணன். இப்படத்தினை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து மலையாளம், தமிழ் மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது கார்த்திகை தீபம், கண்மணி அன்புடன், மாரி, மீணுஸ் கிட்சன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அசாத் நடத்தும் யூடியூப் சேனலில் கலந்து கொண்டு ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், 31 வயதில் இருந்தே அம்மா ரோலில் நடிக்கிறீர்கள், உங்களுக்கு என்ன வயசு, ஏன் அந்த ரோலில் நடிக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மீரா, என் வயசு இப்போது 39 ஆகிறது. 1986ல் பிறந்தேன், அதனால் என்ன, வயசு ஒரு நம்பர் தானே, அம்மா ரோலில் நடிப்பது தவறில்லையே என்று பதிலளித்துள்ளார்.