வீட்டுக்கு வர்றதே கம்மி தான்!! திருமணம் முடிந்த கையோடு ரெடின் கிங்ஸ்லி செய்த வேலை!! புலம்பிய மனைவி சங்கீதா..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், பத்து தல, ஜெயிலர், டிடி ரிட்டர்ன்ஸ், பார்ட்னர், மார்க் ஆண்டனி, அன்னப்பூரணி, வா வரலாம் வா, காஞ்சுரிங் கண்ணப்பா, சரக்கு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
கங்குவா, வாஸ்கோ டா காமா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ரெடிங் கிங்ஸ்லி, கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை தன்னுடைய 46 வயதில் திருமணம் செய்து கொண்டார். மைசூரில் சாதாரணமாக நடைபெற்ற திருமணத்திற்கு பின் இருவரும் அவுட்டிங் சென்று ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை சங்கீதா சென்னை தாம்பரத்தில் நடந்து வரும் டபுள் டக்கர் என்ற அருங்காட்சியகத்திற்கு சென்று பிரமோட் செய்துள்ளனர். தங்கதுரை மற்றும் லொல்லுசபா மாறன் போன்றவர்களுடன் சென்ற சங்கீதா பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து பேசியிருக்கிறார். உங்களுடன் ரெடின் கிங்ஸ்லி ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு, எப்போதும் ஷூட்டிங்கில் தான் இருக்கிறார்.
கல்யாணமான நாள் முதல் இப்போது வரை ஷூட்டிங்கில் தான் இருக்காரு, இன்னைக்கு காலை 8 மணிக்கு வீட்டுக்கு வந்தாரு, மதியம் கிளம்பி போய்ட்டாரு. கல்யாணம் பண்ணுவதற்கு முன்பே அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது.
நான் என் வேலையில் பிஸியாக இருக்கேன், அவர் வேலையில் பிஸியாக இருக்காரு, இருவரும் சேர்ந்து நேரத்தை செலவிடுவது கம்மி தான், ஆனால் அது தெரிந்து தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் இரவு நேரத்தில் கூட ஷூட்டிங் செல்வது எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.