ராஜ்கிரண் அதை செய்யசொல்லி கட்டாயப்படுத்தினர், நானும் அழுதுகொண்டே செய்தேன்.. உண்மை உடைத்த நடிகை சங்கீதா
90ஸ் கிட்ஸ் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று பூவே உனக்காக திரைப்படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடித்து இருப்பார்.
இந்த படம் நடிகை சங்கீதாவுக்கும் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. சங்கீதா முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தில் தான். இப்படத்தில் இவர் நடிக்கும் போது பத்தாம் வகுப்பு தான் படித்துக்கொண்டிருந்தார்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்த கொண்ட இவர், எல்லாமே என் ராசா படத்தில் நடந்து பல தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எல்லாமே என் ராசா திரைப்படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் சொன்னார்கள்.
இதுக்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்று எல்லோரும் உறுதியாக இருந்தனர்
அந்த சமயத்தில் ராஜ்கிரண் ஆபிஸில் இருந்து உணவுகள் வரும் அதை எல்லாம் என்ன சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினர். இதனால் நாள் நான் அழுது கொண்டு சாப்பிடுவேன் என்று சங்கீதா கூறியுள்ளார்.