ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாள்.. மனைவி சங்கீதா போட்ட எமோஷனலான பதிவு
Sangeetha
Actors
Tamil Actors
Redin Kingsley
By Dhiviyarajan
கடந்த 2018 -ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
அண்மையில் இவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனையொட்டி சங்கீதா, ரெடின் கிங்ஸ்லி உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், என்னுடைய மிகச்சிறந்த பாதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. இதுபோன்று இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்துகிறேன் என்று அந்த பதிவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.