விஜய்யுடன் அப்படியொரு ரோல்!! வேண்டவே வேண்டாம்-னு ஒதுக்கிய 31 வயது நடிகை..
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா சாரதி.
துப்பாக்கி படத்திற்கு பின், என்றென்றும் புன்னகை, வாலும் எனை நோக்கி பாயும் தோட்டா, #Bro, வாரிசு போன்ற படங்களில் தங்கை ரோலிலும் நடித்து வந்தார். ஓடிடி தளத்தில் வெளியான சில படங்களிலும் நடித்துள்ள சஞ்னா சாரதி, விஜய் படம் குறித்த சில தகவலை பகிர்ந்துள்ளார்.
துப்பாக்கி படத்திற்கு பின் வேறொரு விஜய் படத்தில் நடிக்க கேட்டார்கள். அந்த படத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் அந்த படத்திலும் விஜய் சாருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே கம்மியான ஸ்கிரீன் என்பதால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எனக்கு நல்ல கதைக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு முன் விஜய் சாருக்கு தங்கையாக நடித்துவிட்டேன். மீண்டும் மீண்டும் இப்படி நடித்தால் நம்மை அந்த ரோலுக்கு பிராண்ட் ஆக்கிவிடுவார்கள் என்ற காரணத்தால் தான் வேண்டாம் என்று கூறிவிட்டதாக சஞ்சனா சாரதி தெரிவித்துள்ளார்.