பரிதாபமாக உயிரிழந்த நடிகை சிந்து!! மருமகளை மகள் போல் கவனித்து கொள்ளும் சஞ்வீவ்
தமிழ் சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரை சீரியலிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது சீரியல்களிலும் ஒருசில படங்களிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சஞ்சீவின் கூடப்பிறந்த அக்கா
சஞ்சீவின் கூடப்பிறந்த அக்கா பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இணைந்த கைகள் படத்தில் கதாநாயகியாக நடிக்க அறிமுகமாகிய நடிகை சிந்து தான் சஞ்சீவின் கூடப்பிறந்த அக்காவாம். வில்லியாக பல படங்களில் நடித்த சிந்து ரகுவீர் என்பவரை திருமணம் செய்து ஸ்ரேயா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
கடந்த 2004ல் ஏற்கட்ட சுனாமியால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில் சிந்து அந்நேரத்தில் கஷ்டப்பட்டு நிதி திரட்டி சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தும் சமூக பணிகளில் ஈடுபட்டதால் உடல் நலத்தை கவனித்துக்கொள்ளாமல் இருந்துள்ளார்.
ஆஸ்துமா
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரின் மகள் ஸ்ரேயாவுக்கு தற்போது 9 வயதாகும் நிலையில் அக்கா மகளை தன் மகள் போல் வளர்த்து வருகிறார் சஞ்ஜீவ்.