வாய்ப்புக்கு இப்படி எல்லாமா கண்டிஷன் போடுவாங்க? விஜய் தங்கை சொன்ன ஷாக்கிங் விஷயம்
Saranya Mohan
By Parthiban.A
வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். அவர் முதலில் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்து பாப்புலர் ஆனார். அதற்கு பிறகு அவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார்.
அதில் வெண்ணிலா கபடி குழு முக்கியமானது. அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் வந்தபோது இயக்கனர் அவர் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். எடையை ஏற்றலாம் சரி, உயரத்தை எப்படி அதிகரிக்க முடியும் என சரண்யா மோகன் ஷாக் ஆகி இருக்கிறார்.
அதற்கு பிறகு வேண்டவே வேண்டாம் என சொல்லி விட்டாராம் சரண்யா. வேறு ஹீரோயினை வைத்து ஒரு வாரம் ஷூட்டிங் நடத்திய பிறகு, இயக்குனர் சுசீந்திரன் யாரடி நீ மோகினி படம் பார்த்து இருக்கிறார். அதன் பின் சரண்யா உயரம் பிரச்சனை இல்லை என சொல்லி வெண்ணிலா கபடி குழுவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.