காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய வலி!! நடிகை சரண்யா ஆதங்கம்..

Gossip Today Actress Saranya Nag Women
By Jai Sep 13, 2026 09:15 AM GMT
Report

காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்தப்பின் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியவர் தான் நடிகை சரண்யா. தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய வலி!! நடிகை சரண்யா ஆதங்கம்.. | Saranya Nagh Emotional And Painful Interview

சரண்யா

சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நிறைய பெண்களை பார்த்துள்ளேன், சில பெண்கள் ரொம்பவே நெருக்கடியான சூழலில் தன் உடம்பையே விற்றிருப்பார்கள், ஆனால் அப்படிப்பட்ட எந்த பெண்ணையும் நான் ஒருநாளும் குறை சொன்னதே இல்லை. ஏன்னா, அந்த விஷயம் எவ்வளவோ பெரிய வேதனை நிறைந்தது என்று எனக்கு தெரியும்.

யாரோ முகம் தெரியாத ஒருத்தனிடம் காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய விஷயம். ஒரு பெண் எந்தளவுக்கு ஏழ்மையில் இருந்தால் இந்த இடத்திற்கு வந்திருப்பாங்க என்பதை நாம் புரிந்து கொள்ளணும். அப்படிப்பட்ட பெண்களை நம்மால் காப்பாத்தவே முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து அவர்களை குறை மட்டும் சொல்லாதீங்க.

காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய வலி!! நடிகை சரண்யா ஆதங்கம்.. | Saranya Nagh Emotional And Painful Interview

நான் தனியாக இருக்கிறேன், எனக்கு என்று யாரும் இல்லை என சொன்னதும், ஆண்கள், பெண்கள் என்னை அணுகும் விதமே வேறாக இருக்கிறது. ஆண்கள் என் கண்ணை பார்த்து பேசுறதைவிட, என் கண்ணுக்கு கீழே பார்த்து பேசுறதுதான் ரொம்ப ஜாஸ்தி. இவளை எப்படி தன் வசப்படுத்திக்கலாம் என்று தான் நினைப்பார்கள். அந்த கோபம் எனக்கு இன்னும் குறையவே இல்லை.

காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய வலி!! நடிகை சரண்யா ஆதங்கம்.. | Saranya Nagh Emotional And Painful Interview

ஆண்கள் இப்படியென்றால், ஆண்களைவிட பெண்கள் தான் ரொம்ப மோசமனவர்கள். ஒரு பெண்ணை இன்னொரு பெண் தான் அசிங்கப்படுத்த முடியும். மொத்தமாக அழிக்க முடியும். பெண்களிடம் உதவி இருக்காது, பொறாமை தான் அதிகமாக இருக்கு. ஆண்களிடமாவது ஏதாவது ஒரு கரிசனம் இருக்கும், பெண்களிடம் அதுக்கூட இருக்காது.

எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறேன். முன்னாடி குண்டா இருந்தப்ப யாரும் எதுவும் சொல்லிருவாங்களோன்னு பயந்து ஒதுங்கி இருப்பேன். ஆனா இப்போ உடல் எடையை குறைத்த்ப்பின் நானே எல்லார்கிட்டயும் போய் பேசுகிறேன், இந்த மாற்றமும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை சரண்யா.