நடிகையின் வாழ்க்கையை சீரழித்த சரத்பாபு.. 14 வருடம் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டிலா?
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர் தான் நடிகர் சரத்பாபு. இவர் நடித்த முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது . இதற்கு அவரின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். தற்போது சரத்பாபு உடல்நிலை தேறி வருவதாக கூறினார்கள்.
சரத்பாபு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பிரபல நடிகையாக இருந்த ரமா பிரபாவை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 14 ஆண்டுகள் ஒரே வீட்டில் தங்கிவந்தார்களாம்
ரமா பிரபா வைத்திருந்த சொத்துக்களை சரத்பாபு ஏமாற்றிவிட்டதாக பல குற்றச்சாற்றுகள் எழுந்தது. தற்போது ரமா பிரபா தனது தம்பியுடன் வசித்து வருகிறார்.