சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale Live!! இளையராஜாவிடம் ஆசி பெற்ற ஃபைனலிஸ்ட்...
சரிகமப லிட்டில் சாப்ஸ் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். கடந்த சில வாரங்களாக இறுது சுற்றுக்கு தேர்வாகப்போகும் அந்த 6 பேருக்கான தேடல் போட்டி நடைபெற்று வந்தது.
அப்படி சிறப்பாக பாடிய, ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி என்ற 6 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Grand Finale Live
இந்நிலையில் வரும் மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. மேலும் ஜி தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் Grand Finale Live நடக்கவுள்ளது.
அதற்கான பிரமாண்ட பிரமோ வீடியோவை இணையத்தில் நிகழ்ச்சிக்குழு வெளியிட்டது. அந்த பிரமோவில் யார் வெற்றி பெருவார் என்ற யூகங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் பெரும்பாலும் திவினேஷ் தான் டைட்டில் வின்னர் என்று கூறி வருகிறார்கள். மக்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவை இறுதி போட்டியாளர்கள் 6 பேரும் நேரில் சென்று ஆசி பெற்றுள்ளனர்.