சரிகமப சீனியர் 5ல், லிட்டில் சேம்ப்ஸ் 4ன் Runner-up யோகஸ்ரீ..யாருக்கு சப்போர்ட் தெரியுமா?
சரிகமப சீனியர் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப. தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த சில வாரத்திற்கு முன் நடந்து முடிந்த நிலையில் அறிமுக சுற்று நடந்து முடிந்துள்ளது. அதில் பல போட்டியாளர் சிறப்பாக பாடி அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு எமோஷ்னலாக உருகவும் வைத்திருக்கிறார்கள்.
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 யோகஸ்ரீ
அந்தவகையில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் 4ன் ஃபைனலிஸ்ட்களை சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியிலும் பாட வைத்திருக்கிறார். கடந்த வாரம் திவினேஷ் வந்த நிலையில், இந்த வாரம் யோகஸ்ரீ வருகை தந்து, தன் ஊரில் இருந்து வந்த செந்தமிழனுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற செந்தமிழன் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.