ஜிப்பா போட்டே ஒருத்தன் டைட்டில் வின்னராகிட்டான்!! திவினேஷை கலாய்த்த குட்டி பையன் புவினேஷ்..
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் Sangamam ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள், சரிகமப நிகழ்ச்சியின் பழைய சீசன் போட்டியளர்களர்களுடன் பாடியுள்ளனர்.
புவினேஷ்
அப்போது, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ல் கலந்து கொண்ட புவினேஷ் மேடைக்கு வந்துள்ளார். என்னுடைய ஊர் பையன் விக்னேஷுடன் பாடப்போகிறேன் என்று கூறி அவரை அழைத்துள்ளார்.
அப்போது நீ இந்த மாதிரி ஆடைதான் அணிந்து பாடுணும், ஜிப்பா போட்டே ஒருத்தன் டைட்டில் வின்னராகிட்டான், இந்த ஜிப்பா போட்டு சோகமாக பாட்டைத்தான் பாடணும் என்று புவினேஷ் தெரிவித்துள்ளார்.
இதை சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னர் திவினேஷை, புவினேஷ் கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.