இலங்கை புகழ் சபேசனுக்கு பிரபல இசையமைப்பாளர் கொடுத்த பெரிய வாய்ப்பு
Saregamapa Seniors Season 5
By Yathrika
சபேசன்
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப சீசன் 5. பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற கிடைத்த பெரிய மேடையாக உள்ளது.
இப்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் உள்ள போட்டியாளர்கள் வாரா வாரம் கடுமையாக பயிற்சி செய்து போட்டிபோட்டு வருகிறார்கள்.
இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி இசையமைப்பாளர் தேவா ரவுண்ட்.
இலங்கை புகழ் சபேசன் ஆசை பட பாடலை பாடியதோடு ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். சார் 2015ம் வருடம் நீங்கள் இலங்கை வந்தீர்கள், அப்போது நிகழ்ச்சியில் பாட வந்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது உங்கள் உன் பாடுகிறேன் என்றார்.
உடனே இசையமைப்பாளர் தேவா டிசம்பர் 5 இலங்கையில் எனது கச்சேரி அதில் நீங்கள் பாடுங்கள் என கூற சபேசன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.