சூழ்நிலை கைதியாகி சிக்கித்தவிக்கும் சசிகுமார்! உச்சக்கட்ட விரக்தியில் குழம்பும் நிலை..

Sasikumar
By Edward Jul 23, 2022 09:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தில் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் சசிகுமார். எடுத்த முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்த சசிகுமார், இதனை அடுத்து சுந்தரபாண்டியன் போராளி, நாடோடிகள் போன்ற படத்தினை இயக்கி வெற்றியை கொடுத்தார்.

இயக்கம், நடிப்பு போன்றவற்றை தாண்டி சில படங்களை தயாரித்தும் வந்துள்ளார் சசிகுமார். அவர் தயாரித்த சில படங்களின் தோல்வியால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். பெரும் கடன் சுமைக்கு ஆளாகி இயக்குவது, தயாரிப்பதை நிறுத்தி விட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் நடிப்பில் ஒர்க்கவுட் ஆகவில்லை என்று விரக்தியில் என்ன செய்வது என்று புலம்பியுள்ளார். இப்படியொரு பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்று சசிகுமார் தீவிர சிந்தனையில் இருக்கிறாராம்.

நஷ்டங்களை பார்த்து தயக்கம் காட்டாத சசிகுமார் சூழ்நிலை கைதியாக மாறி கடைசியில் முழு நேர இயக்குனராகவே இருக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம். அதற்கு பலனாக ஒரு நிறுவனம் சசிகுமாரை அனுகி விரைவில் படத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளதாம்.