21 வயது வித்தியாசம்!! அந்த நடிகையுடன் லிப் லாக்.. சசி குமார் ஓபன் டாக்
இயக்குனர் நடிகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் சசி குமார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூரி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சசி குமார், லட்சுமி மேனனுடன் லிப் லாக் காட்சி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், குட்டி புலி படத்தில் லட்சுமி மேனனுடன் லிப் லாக் காட்சி இருக்கிறது என இயக்குனர் கூறினார். ஆனால் நான் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
அதன் பின்னர் அந்த காட்சியை மாற்றி எடுத்துவிட்டனர். அதில் ஹீரோயின் ஹீரோவிற்கு முத்தம் கொடுத்தது போல் படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும். ஆனால் அந்த காட்சி இருக்க கூடாது என்பதற்காக சில கிமிக்ஸ் செய்து அந்த லிப் லாக் காட்சியை எடுத்தோம் என்று சசி குமார் கூறியுள்ளார். நடிகர் சசி குமார் - லட்சுமி மேனன் இடையே 21 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.