திருமணமாகி 10 ஆண்டாகியும் குழந்தை இல்லை! சத்குருவிடம் மேடையில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகரின் மனைவி

Ram Charan
By Edward Jul 11, 2022 10:56 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராம் சரண் தற்போது சங்கரின் இயக்கத்தில் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார். ராம்சரண் கடந்த 2012ல் உபசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

உபசனா ஒரு தொழிலதிபராக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சத்குருவிடம் நானும் என் கண்வரும் கடந்த 10 வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வருகிறோம்.

நாங்கள் 10 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்கிறோம். ஆனால் எங்கள் உறவினர்கள் பல்வேறு கேள்விகளை இதனால் கேட்டு வருகிறார்கள். எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை என்றும் எங்களுக்கென ஒரு இலக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சத்குரு, நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் இந்த முடிவெடுத்ததற்கு வாழ்த்துக்கள். தகுதி இருந்தும் அதை தள்ளி போடுகிறீர்கள் இதற்கு என் பாரட்டுக்கள் என்றும் மக்கள் தொகை உலகளவில் 10 மில்லியனை நெருங்கி வரும் நிலையில் உங்கள் முடிவு நல்லது தான்.

அழிவின் விளிம்பில் தற்போது மனித இனம் ஒன்று தான் இல்லாமல் இருக்கிறது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்த கட்டாயமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை ராம் சரணின் மனைவி உபசனா இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.