தெறி, படையப்பா படத்துக்கு வந்த சோதனை? சீரியல்ல இப்படியொரு மாஸ் படங்களா? கதறும் ரஜினி ரசிகர்கள்

Rajinikanth Vijay Serials
By Edward Jun 18, 2022 11:30 AM GMT
Report

சினிமாவை தாண்டி மக்கள் அதிகமாக கவனித்து வரும் பொழுதுபோக்கு விசயம் தொலைக்காட்சி சீரியல்கள். தற்போது காலை ஆரம்பித்து இரவு 11 மணிவரைக்கும் சீரியல்களாகவே வார நாட்களில் ஒளிப்பரப்பாகும். அதேபோல் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையையும் விடாது சீரியல்களை ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.

அப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வித்யாசமான கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் சத்யா. இரண்டாம் பாகமாக சத்யா 2 பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

போலிஸ் காட்சிகள் தற்போது சென்று வரும் நிலையில் தெறி படத்தின் ஒரு காட்சியை பின்னணி இசையை கூட காப்பி அடித்து அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதனை விஜய் ரசிகர்கள் இதை பார்த்து ஷாக்கானார்கள்.


தெறி படத்தை தொடர்ந்து தற்போது படையப்பா படத்தையும் வெச்சு செய்துள்ளனர் சத்யா 2 சீரியல். ரஜினி எப்படி துண்டை தூக்கி ஊஞ்சலை இழுப்பாரோ, அதேபோல் சத்யா லத்தியை தட்டி ஊஞ்சலை இழுத்துள்ளார். இதனை பலர் என்னடா இது படையப்பா படத்துக்கு வந்த சோதனை என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

17 வயதான நடிகை அனிகாவா இது? காரில் இப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படம்