கடன் பிரச்சனையாலே மரணமடைந்த நடிகை சாவித்ரி! அந்த நடிகருடன் மது போட்டிதான் காரணமா?
தமிழ் சினிமாவில் 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. நடிகையர் திலகம் என்ற பெயரை தன்னுடைய சிறப்பான நடிப்பால் புகழப்பட்டவர். அறிமுகமாகிய ஒரே வருடத்தில் நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து இரண்டாம் மனைவியானார்.
திருமணத்திற்கு பிறகும் தன் நடிப்பின் ஆர்வத்தை காட்டி சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாக சினிமாத்துறையில் நடித்த சாவித்ரி 1981ல் உடல்நலக்குறைவால் காலமானார்.
கணவர் இறப்பதற்கு முன்பே மரணமடைந்தார் சாவித்ரி. அதுவும் நடிகர் சந்திரப்பாபுவுடன் போட்டிபோட்டு மதுவினை அருந்தியதாக நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
குடி போதையால் தான் சாவித்ரியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் தன் கணவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் குடித்தாராம். சொந்த படம் எடுத்து கடனாளியாகவே மரணமடைந்தார் நடிகை சாவித்ரி.