திருமணத்திற்கு பின் நடிக்கவிடாமல் தடுக்கும் ஆர்யா?.. 25 வயதிலே மார்க்கெட்டை இழந்த நடிகை சாயிஷா..

Arya Sayyeshaa Bayilvan Ranganathan
By Edward Sep 24, 2022 06:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து ஒருசில படங்களிலேயே டாப் ஆர்டர் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை சாயிஷா.

காப்பான், கடைக்குட்டி சிங்கம், வனமகன் உள்ளிட்ட தமிழ படங்களில் நடித்து பிரபலமாகினார். பின் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடிபோட்டு நடித்து ரியல் ஜோடியாக காதலித்து வந்தனர்.

2017ல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்யா சாயிஷாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை இதுவரையில் காட்டாமல் இருவரும் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

வெறும் 25 வயது தான் சாயிஷாவுக்கு ஆகிறது. அப்படி இருக்கையில் திருமணத்திற்கு பிறகு சாயிஷா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இதற்கு காரணம் ஆர்யா அவரை நடிக்கவிடமாமல் தடுத்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த யூடியூப் வீடியோவில் கூறியுள்ளார்.

நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் மார்க்கெட்டை இழப்பதும் ,கணவர்கள் நடிக்கவிடாமல் தடுப்பதும் சினிமாவில் சகஜம் தான் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.