ஸ்கூல் தொறந்த 24 மணிநேரத்திலயே விடுமுறை அறிவிப்பு...'எல்லாம் எங்க நேரம் சார்' என சோகத்தில் பள்ளிமாணவர்கள்!

schools closed
By Yathrika Nov 02, 2021 06:37 AM GMT
Report

 கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதன் எதிரொலியாக பொது வாழ்வு முற்றிலும் முடங்கியது.

இதனால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு அதுமுதல் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மாணவர்கள் வீட்டிலிருக்கவேண்டிய சூழலே நிலவி வந்தது.

தமிழகத்திலும் அதே நிலையே தொடர்ந்தது அதற்கு பிறகு இடையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் தற்பொழுது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைக்கான வகுப்புகள் நேரடியாக நேற்று தொடங்கப்பட்டது..

கனமழை காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்கூல் தொறந்து ஆசை ஆசையாக பள்ளிக்கு செல்ல ஆர்வமாக இருந்த பள்ளிச்சிறுவர்களுக்கு இந்த செய்து வருத்தமளிப்பதாகவே அமைந்துள்ளது.