ஒலறி ஒலறி கடைசில பைனலுக்கு போய்ட்டான்! எலிமினேட் இவரா?
பிக் பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 நபர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால், இதிலிருந்து இந்த வாரத்தின் இறுதியில் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி, மீதமுள்ள டாப் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரத்திற்கு செல்வார்கள். அப்படியிருக்கையில் ஏற்கனவே டிக்கெட்டு ஃபினாலே மூலம் அமீர் முதல் இறுதி போட்டியாளராக தகுதி பெற்றார்.
அவரை தொடர்ந்து தற்போது நிரூப் இரண்டாம் இறுதி போட்டியாளர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் தான் வெளியேறுவார் என்று வோட்டிங் மூலம் இணையத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சில போட்டியில் வென்ற நிரூப் தற்போது 2ஆம் ஃபைனல் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். மேலும் இந்தவாரம் தாமரை வெளியேறுவார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.