சீரியலுக்காக இரண்டாம் தாலி! செம்பருத்தி ஷபானாவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

actress serial television sembaruthi shabana
By Edward Jan 04, 2022 07:55 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பாரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் செம்பருத்தி. கதாநாயகனாக பலர் மாற்றிய நிலையில் செம்பருத்தியா ஷபானா மட்டும் நடித்து வருகிறார் இந்த சீரியலில்.

சமீபத்தில் ஷபானா பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹனிமூனிற்கு சென்ற முதல் நாளே சில பிரச்சனையால் வீடு திரும்பினர்.

இருவருக்கும் விவாகரத்து என கூறி வந்த நிலையில் கிறிஸ்மஸ் அன்று ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விவாகரத்து செய்திக்கு முற்றுபுள்ளி வைத்தனர்.

இதைதொடர்ந்து ஷபானா செம்பருத்தி சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் சீரியலில் முக்கிய காட்சிகள் ஒளிப்பரப்பானது. அதில் இருவருக்கும் திருமணமாகி சாந்திமுகர்த்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த அறையில் செம்பருத்தியும் அந்த சீரியல் நடிகை ஒருவரும் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு பலர் இது உண்மையா கட்டுன தாலிதானே என்று கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.