நடிகையை ஏமாற்றி போலீசுக்கு தண்ணிக்காட்டிய சீரியல் நடிகர் அர்னவ்.. சூட்டிங்கிற்கே சென்று லாக் செய்த காவல்துறை

Serials Gossip Today
By Edward Oct 14, 2022 04:00 PM GMT
Report

சின்னத்திரையில் சமீபகாலமாக சர்ச்சையாக பேசப்பட்டு வருகிற நிகழ்வு, சீரியல் நடிகர் அர்னவ், சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் விவகாரம் தான். திருமணமாகி 5 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்தான திவ்யாவை அர்னவ் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

அர்னவ்-ஆல் கர்ப்பமாகிய நிலையில் திருமணம் புகைப்படத்தை வெளியிட்டதால் திவ்யா மீது தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட திவ்யா தன் கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்தியதாக புகாரளித்து வீடியோவை பகிர்ந்தார்.

இந்த விசயம் பெரியளவில் பரவ, நள்ளிரவில் திவ்யா செய்தியாளர்களை சந்தித்து உண்மையை கூறினார். அர்னவும் தனது தரப்பில் சில உண்மைகளை கூறியிருந்தார்.

இதன்பின் தன் கணவர் அர்னவ் வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருந்ததும் சக நடிகையை பிளாட்டிற்கு தனியாக அழைத்த ஆடியோவும் இணையத்தில் பரவியது.

இதுதொடர்பாக திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகாரின் படி இன்று அர்னவ்-ஐ அவரது சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று போலிசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் இருவரையும் விசாரித்து வருகிறார்கள்.