பிரபல சீரியல் நடிகர் சல்மானுள்க்கு விரைவில் டும் டும் .. யாருடன் தெரியுமா

Actors Marriage Tamil TV Serials
By Bhavya Feb 08, 2025 04:30 AM GMT
Report

சல்மானுள் ஃபாரிஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2ம் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சல்மானுள் ஃபாரிஸ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த தொடர் மூலம் தமிழில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகர் சல்மானுள்க்கு விரைவில் டும் டும் .. யாருடன் தெரியுமா | Serial Actor Marriage

தமிழ் தொடர்களில் மட்டுமின்றி மலையாளத்தில் அம்மரியாதே, மிழி ரண்டிலும் என்ற இரு தொடர்களில் நடித்துள்ளார். இந்தத் தொடர் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதை தொடர்ந்து, தற்போது சல்மானுள் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் ஆடுகளம் என்ற தொடரில் நாயகனாக நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

யாருடன் தெரியுமா 

இந்நிலையில், சல்மானுள் அவரது திருமண அறிவிப்பை தனது இன்ஸ்டா தளம் மூலம் வெளியிட்டுள்ளார். அதாவது மிழி ரண்டிலும் என்ற தொடரில் தன்னுடன் நடித்த நடிகை மேகா மகேஷை காதலித்து வந்துள்ளார்.

தற்போது இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்ய உள்ளார்களாம். இதற்கு ரசிகர்கள் மற்றும் சீரியல் நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.